சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில், பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஜெயிலர் 2’ படத்தின் கதைக்களம் கேரளாவை மையப்படுத்தி, மோகன்லாலின் ‘மேத்யூ’ கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வித்யா பாலன், மோகன்லாலுக்கு ஜோடியாக அல்லது கதையின் முக்கியத் திருப்பத்திற்குக் காரணமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என யூகங்கள் பரவி வருகின்றன.
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் தகவல் குறித்து, தயாரிப்புத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.