முடிந்துபோன விஷயத்துக்குக் கமா போடக்கூடாது”: நடிகர் கவின் சுவாரஸ்யப் பேட்டி!
சென்னை: தனது ‘கிஸ்’ திரைப்பட வெளியீட்டை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நடிகர் கவின், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சினிமாப் பயணம் மற்றும் வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “வாழ்க்கையில் ஒரு விஷயம் முடிந்துவிட்டால், அதை விட்டுவிட வேண்டும்; சும்மா கமா போட்டுத் தொடரக்கூடாது,” என்ற அவரது பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது.
வரும் செப்டம்பர் 18ஆம் திகதி வெளியாகும் ‘கிஸ்’ திரைப்படம், ஒரு ஃபேன்டஸி அம்சம் கலந்த ரொமான்டிக்-காமெடி எனக் கூறிய அவர், “ஸ்டார் சிஸ்டம் குறைந்துவிட்டது, இப்போது கதை நன்றாக இருந்தால் மட்டுமே ரசிகர்கள் படத்தைப் பார்க்கிறார்கள்,” என்றார்.
நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் படம் ஒரு பக்கா குடும்பத் திரைப்படம் என உறுதிப்படுத்திய கவின், இயக்குனர் வெற்றிமாறனுடன் பைக்கில் சென்ற புகைப்படம் விளம்பரத்திற்காக வெளியிடப்படவில்லை எனவும் தெளிவுபடுத்தினார். சினிமா உலகில் தனது அனுபவங்கள் குறித்தும் அவர் மனம் திறந்தார்.
