பிக் பாஸ் 9′-ன் முதல் உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்: நடிகை தேஜூ அஸ்வினி அறிவிப்பு!
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் தான் ஒரு போட்டியாளராகப் பங்கேற்கவிருப்பதை, இளம் நடிகை தேஜூ அஸ்வினி உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம், இந்த சீசனில் கலந்துகொள்ளும் முதல் போட்டியாளராக அவர் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர், “நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9ஆவது போட்டியாளராக உள்ளே செல்கிறேன். இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்,” என்றார். நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதியிடம், ‘என்னை ஞாபகம் இருக்கிறதா சார்?’ எனக் கேட்கப் போவதாகவும் அவர் ஜாலியாகக் குறிப்பிட்டார்.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சி, வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த முறையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ள நிலையில், சின்னத்திரையில் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
