காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று (31) நள்ளிரவுக்குச் சற்று முன்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், குறைந்தது 600 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,500 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் எல்லையருகே, ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், பாகிஸ்தான் மற்றும் இந்தியா வரையிலும் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், மண் மற்றும் மரத்தால் கட்டப்பட்ட பல நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. காயமடைந்தவர்களை மீட்டு, வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்வதற்காக ஹெலிகொப்டர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.