Headlines

AI இம்பாக்ட் உச்சிமாநாடு 2026: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க புதுடெல்லி சென்றடைந்தார்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI இம்பாக்ட் உச்சிமாநாடு 2026’ (AI Impact Summit 2026) நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நேற்று (17) பிற்பகல் புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு, இந்திய இராஜாங்க அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சவுத்ரி மற்றும் ஏனைய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதுடெல்லியில் நடைபெறும் இந்த ‘AI இம்பாக்ட் உச்சிமாநாடு 2026’ ஆனது, மனித குலத்தின் நன்மைக்காக செயற்கை நுண்ணறிவின் (AI) பொறுப்பான பயன்பாடு குறித்து கவனம் செலுத்துகிறது.

இந்த உச்சிமாநாட்டில், எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உரையாற்றவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஏனைய பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *