Headlines

AI உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்ற ஜனாதிபதி அநுர, இந்தியப் பிரதமர் மோடியுடன் சந்திப்பு! இன்று உரை நிகழ்த்துகிறார்

புதுடெல்லியில் நடைபெற்று வரும் ‘AI இம்பாக்ட் உச்சிமாநாடு 2026’ (AI Impact Summit 2026) நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நேற்று (19) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ‘AI இம்பாக்ட் உச்சிமாநாடு 2026’ நிகழ்வில் இன்று (வியாழக்கிழமை) விசேட உரையாற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கடந்த செவ்வாய்க்கிழமை (17) புதுடெல்லி சென்றடைந்தமை நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *