ஆசியக் கோப்பை: நேற்று நடந்த போட்டிகளின் முடிவுகள்
அபுதாபி: நேற்று (15) நடைபெற்ற ஆசியக் கிண்ண T20 தொடரின் லீக் போட்டிகளில், ஐக்கிய அரபு அமீரகம் ஓமன் அணியையும், இலங்கை அணி ஹாங்காங் அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றன.
அபுதாபியில் நடைபெற்ற போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய அமீரகம் 172 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் ஆடிய ஓமன் அணி 130 ஓட்டங்களுக்குள் சுருண்டதால், அமீரகம் 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது. நாளை (17) நடைபெறவுள்ள அமீரகம்-பாகிஸ்தான் போட்டி, ஒரு நாக்-அவுட் போட்டியாக மாறியுள்ளது.
மற்றொரு போட்டியில், ஹாங்காங் நிர்ணயித்த 150 என்ற வெற்றி இலக்கை, இலங்கை அணி 7 பந்துகள் மீதமிருக்க வெற்றிகரமாக எட்டியது. இலங்கை சார்பில், பெத்தும் நிஸ்ஸங்க 44 பந்துகளில் 68 ஓட்டங்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
