கொழும்பு: 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என லாஃப்ஸ் கேஸ் பிஎல்சி (LAUGFS Gas PLC) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பை லாஃப்ஸ் கேஸ் பிஎல்சியின் கிளஸ்டர் பணிப்பாளர்/தலைமைச் செயல் அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் (Dr. Niroshan J Peiris) வெளியிட்டார்.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் லாஃப்ஸ் கேஸ் சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்:
- 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்: ரூ. 4,100
- 05 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர்: ரூ. 1,645
சந்தை நிலவரங்களின் அடிப்படையில் இந்த மாதம் விலைகளை மாற்ற வேண்டிய அவசியம் எழவில்லை என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
