சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தாலும், இந்த சீசன் ஆரம்பம் முதலே டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
இதற்கு முக்கியக் காரணம், போட்டியாளர்களின் மோசமான மற்றும் முகம் சுளிக்கும் வகையிலான நடவடிக்கைகள்தான் என்கிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில், இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியேறப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
‘அடல்ட் கன்டென்ட்’ சீசன்
கடந்த சீசன்களை ஒப்பிடுகையில், இந்த 9வது சீசன் அடல்ட் கன்டென்டுக்கு ஃபேமஸாக மாறியுள்ளது. பலரும் “18 + சீசன்” என்று இதை விமர்சித்து வருகின்றனர். ஆண்கள் 10 பேர், பெண்கள் 10 பேர் என மொத்தம் 20 போட்டியாளர்கள் சென்ற இந்த வீட்டுக்குள், போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் மோசமாகப் பேசிக் கொள்வது, நெருக்கமாக நடந்து கொள்வது போன்றக் காட்சிகள் 24 மணி நேர லைவ்வில் இடம்பெறுகின்றன.
குறிப்பாக, திவாகரின் பாடி லாங்வேஜ், எஃப் ஜேவின் (FJ) பாடி ஷேமிங் தொடர்பானப் பேச்சுக்கள் ஆகியவை இந்த சீசனுக்கு ‘அடல்ட் கன்டென்ட்’ முத்திரையைப் பதித்துள்ளது.
4வது வார எவிக்ஷன் – லீக் தகவல்
கடந்த 3 வாரங்களில் ஓட்டுக்கள் அடிப்படையில் பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். VJ நந்தினி மட்டும் முதல் வாரமே தனிப்பட்ட காரணங்களால் பிக் பாஸ் ஷோவில் இருந்து விலகினார்.
இந்நிலையில், இந்த வாரம் 4வது எவிக்ஷன் நடைபெறவுள்ளது. இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் அகோரி கலை, அரோரா, காம்ரூதின், பார்வதி, கானா வினோத் ஆகியோர் உள்ளனர்.
இதில் குறைந்த வாக்குகள் அடிப்படையில் அகோரி கலை, அரோரா, காம்ரூதின் ஆகியோர் கடைசி மூன்று இடங்களில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மூன்று பேரில், அரோரா அல்லது அகோரி கலை வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
டி.ஆர்.பி.யை ஏற்ற வரும் 4 வைல்டு கார்டுகள்!
போட்டியாளர்கள் சுவாரசியமாக இல்லாததாலும், கன்டென்ட்டுக்காக மட்டுமே இருப்பதாலும் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் ஏற்பட்டப் பின்னடைவைச் சமாளிக்க, பிக் பாஸ் நிர்வாகம் அதிரடி முடிவெடுத்துள்ளது.
இந்த வாரம் 4 வைல்டு கார்டு போட்டியாளர்களும் உள்ளே செல்லவிருக்கின்றனர். புதிய போட்டியாளர்களின் வருகை, வீட்டில் நிலவும் “18+” கன்டென்ட்டுகளை மாற்றி, ஒரு ஆரோக்கியமான போட்டிச் சூழலைக் கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெளியே செல்லப் போகும் போட்டியாளரும், உள்ளே வரப் போகும் வைல்டு கார்டுகளும், இந்த டல்லடித்த சீசனைச் சூடுபிடிக்க வைப்பார்களா என்றுப் பொறுத்திருந்து பார்க்கலாம்!
