அக்டோபர் 5ல் பிக் பாஸ் 9: விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 9ஆவது சீசன், வரும் அக்டோபர் 5ஆம் திகதி முதல் தொடங்கவுள்ளதாக விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் தொகுத்து வழங்கும் இந்த சீசனில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் பால சரவணன், நடன அமைப்பாளர் சதீஷ் கிருஷ்ணன், நடிகை ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாகக் கலந்துகொள்ளலாம் என இணையத்தில் ஒரு உத்தேசப் பட்டியல் பரவி வருகிறது. இருப்பினும், இது இன்னும் படக்குழுவால் உறுதிப்படுத்தப்படவில்லை.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், சின்னத்திரையில் இந்த சீசன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
