Headlines

வரலாறு தெரிந்து பேசுங்கள் தம்பி விஜய்”: பாஜகவின் குஷ்பு அறிவுரை!

சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய், பாஜக குறித்து முன்வைக்கும் விமர்சனங்களுக்கு, நடிகையும், பாஜகவின் மாநிலத் துணைத் தலைவருமான குஷ்பு பதிலடி கொடுத்துள்ளார். “தம்பி விஜய், கொஞ்சம் அரசியல் வரலாறு தெரிந்து பேச வேண்டும்,” என அவர் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று (16) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது புதிதல்ல. ஏற்கெனவே இருந்ததைத்தான் காங்கிரஸ் பிரித்தது; பாஜக அதை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது,” என்றார். விஜய்யின் வெற்றி தோல்வியை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், திமுகவின் குடும்ப அரசியலையும், இளையராஜா பாராட்டு விழாவில் பெண் கலைஞர்கள் அழைக்கப்படாததையும் அவர் கடுமையாக விமர்சித்தார். தமிழக அரசியல் களம் தேர்தலை நோக்கிச் சூடுபிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *