Headlines

இலங்கை சுற்றுலாத்துறைக்கு புத்துயிர்: ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன் டொலர் கடன்!

கொழும்பு: நிலைபேறான சுற்றுலாத்துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை (STSDP) நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நிலைபேறான சுற்றுலாத்துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி, சலுகைக் பொது மூலதன வளங்களிலிருந்து 70 மில்லியன் அமெரிக்க டொலர்களும், நிரந்தர பொது மூலதன வளங்களிலிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களும் என மொத்தம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த கடன் வசதியைப் பெறுவதற்கு இலங்கை மத்திய வங்கி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களமும் அனுமதி வழங்கியுள்ளன.

எனவே, இந்த கடன் உதவியைப் பெறுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கான, நிதி, திட்ட அமுலாக்கல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *