Headlines

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: 3 புதிய அமைச்சர்கள், 10 பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு!

கொழும்பு: அரசாங்கத்தின் அபிவிருத்தி நோக்கங்களைத் துரிதப்படுத்தும் நோக்கில், இன்று (10) அமைச்சரவை மாற்றம் இடம்பெற்றுள்ளது. இதன்படி, 3 புதிய அமைச்சரவை அமைச்சர்களும், 10 பிரதி அமைச்சர்களும் தமது புதிய பதவிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர்.

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு அமைவாக, அபிவிருத்தி இலக்குகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


புதிய அமைச்சரவை அமைச்சர்கள்:

  • விமல் நிரோஷன் ரத்நாயக்க: போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்.
  • அநுர கருணாதிலக்க: துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்.
  • கலாநிதி எச்.எம். சுசில் ரணசிங்க: வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்.

புதிய பிரதி அமைச்சர்கள்:

கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ (நிதி மற்றும் திட்டமிடல்), டி.பி. சரத் (வீடமைப்பு), எம். முனீர் (மத மற்றும் கலாசார அலுவல்கள்), எரங்க குணசேகர (நகர அபிவிருத்தி) உள்ளிட்ட 10 பேர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *