கொழும்பு: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceypetco), பெற்றோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைத்துள்ளது. இந்த புதிய விலைத் திருத்தம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய விலைகள்:
- பெற்றோல் 92 ஒக்டேன்: ரூ. 6 குறைந்து, புதிய விலை ரூ. 299
- ஓட்டோ டீசல்: ரூ. 6 குறைந்து, புதிய விலை ரூ. 283
- சுப்பர் டீசல்: ரூ. 12 குறைந்து, புதிய விலை ரூ. 313
அதேவேளை, பெற்றோல் 95 ஒக்டேன் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.