பெய்ஜிங்: இரண்டாம் உலகப் போரின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் இன்று (03) மாபெரும் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் உள்ளிட்ட 26 உலகத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பெய்ஜிங்கின் தியனன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், சீனாவின் சமீபத்திய தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்கள், தாங்கிகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டு, சீனாவின் இராணுவ வலிமை பறைசாற்றப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ஜி ஜின்பிங், சீனா தொடர்ந்து “அமைதியான அபிவிருத்திப் பாதையைப் பின்பற்றும்” என உறுதியளித்தார். போரில் உதவிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு நன்றி தெரிவித்த அவர், அமெரிக்காவின் பெயரைத் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது. “மனிதகுலம் மீண்டும் அமைதியா அல்லது போரா என்ற ஒரு தேர்வை எதிர்கொண்டுள்ளது,” எனவும் அவர் குறிப்பிட்டார்.