கொழும்பு: பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின், மார்ஃபிங் செய்யப்பட்ட (திரிக்கப்பட்ட) புகைப்படம் ஒன்றைப் பரப்பியவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளார்.
இந்தோனேசியாவிலிருந்து பாதாள உலகக் குழுவினர் அழைத்து வரப்பட்டபோது, அமைச்சர் ஆனந்த விஜேபால விமான நிலையத்தில் அவர்களை வணங்கியதாகக் காட்டும் வகையிலான புகைப்படம் ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து, அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டை அடுத்தே இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று (31) பொதுப் பாதுகாப்பு அமைச்சு இந்தச் செய்தியை முற்றாக மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.