Headlines

கொழும்புத் துறைமுகம் 32.2 பில்லியன் ரூபாய் இலாபம்: 71% அபார வளர்ச்சி!

கொழும்பு: 2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், கொழும்புத் துறைமுகம் (வரிகளுக்குப் பின்) 32.2 பில்லியன் ரூபாய் நிகர இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில், துறைமுகத்தின் நிகர இலாபம் 18.9 பில்லியன் ரூபாயாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இது சுமார் 13 பில்லியன் ரூபாய் அதிகரிப்பாகும், இது 71% என்ற அபார வளர்ச்சியைக் குறிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *