மீண்டும் புதிய வரலாற்று உச்சத்தில் கொழும்புப் பங்குச் சந்தை: ASPI 21,676 புள்ளிகளில் நிறைவு!
கொழும்பு: இன்றைய (29) வர்த்தக நாள் முடிவில், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) மீண்டும் ஒரு புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.
இன்று, ASPI 77.31 புள்ளிகளால் (0.36%) உயர்வடைந்து, 21,676.30 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது, கடந்த வெள்ளிக்கிழமை (26) பதிவு செய்யப்பட்ட 21,598.99 என்ற உச்சபட்ச சாதனையை முறியடித்துள்ளது.
S&P SL20 சுட்டெண்ணும் 6,119.21 புள்ளிகளில் நிறைவடைந்ததுடன், இன்றைய மொத்தப் புரள்வு 4.25 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியது. நாட்டின் பொருளாதார மீட்சி குறித்த நம்பிக்கை அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது.
