கொழும்பு: கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் (ASPI) இன்று (நவம்பர் 04) காலை வர்த்தக அமர்வின் போது, வரலாற்றில் முதன்முறையாக 23,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
இன்று காலை சுமார் 09:37 மணியளவில், அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 23,000.54 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது.
இது இலங்கை பங்குச் சந்தை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதை இது காட்டுவதாக நிதி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
