கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து இன்று (11) வெளியேறியமை, அவரது புதல்வரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்குத் தெரியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
“நாமல் ராஜபக்ஷ தற்போது வெளிநாட்டில் இருப்பதால், அவர் கொழும்பில் இல்லை” என சாகர காரியவசம் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.
ஆனால், சாகர காரியவசத்தின் இந்தக் கருத்துக்கு முரணாக, நாமல் ராஜபக்ஷ தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், “கொழும்பில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய பின்னர், எனது தந்தை அவரது சொந்த ஊரான தங்காலையை வந்தடைந்துள்ளார்,” எனக் குறிப்பிட்டுள்ளார். நாமல் ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதாக சாகர காரியவசம் கூறியுள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷவின் ட்வீட், SLPP கட்சிக்குள் ஒருவித குழப்பம் நிலவுவதை வெளிக்காட்டியுள்ளது.
