Headlines

குக் வித் கோமாளி 6′ டைட்டில் வின்னர் ராஜு ஜெயமோகனா? – இணையத்தில் கசிந்த தகவல்!

சென்னை: குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நெருங்கி வரும் நிலையில், இந்த சீசனின் டைட்டில் வின்னராக, பிக் பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன் வெற்றி பெற்றுள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. ஷபானா, லட்சுமி ராமகிருஷ்ணன், ராஜு மற்றும் உமைர் ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தனர். ஷபானாவே வெற்றி பெறுவார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், ராஜு ஜெயமோகன் வெற்றி பெற்றதாகக் கூறப்படுவது, சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜு ஏற்கெனவே பிக் பாஸ் டைட்டிலை வென்றவர் என்பதால், பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், சிலர் இந்த முடிவை விமர்சித்தும் வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இறுதிப் போட்டியிலேயே அதிகாரப்பூர்வ வெற்றியாளர் யார் என்பது தெரியவரும். சின்னத்திரை ரசிகர்கள் இந்த முடிவிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *