“அம்மா 120 கி.மீ. நடந்து வந்தாங்க”: மதுரையில் கண்ணீர் மல்கிய தனுஷ்!
சென்னை: மதுரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய நடிகர் தனுஷ், தனது பெற்றோரின் ஆரம்பகால வாழ்க்கைப் போராட்டங்களை நினைவுகூர்ந்து மேடையில் கண்ணீர் மல்கினார்.
“பிழைப்புக்காக சென்னை செல்லப் பணமில்லாத சூழலில், என் தாய் மூன்று மாத கர்ப்பிணியாக 120 கிலோமீற்றர் தூரம் நடந்து மதுரைக்கு வந்தார். என் அப்பா, அம்மா கால் கடுக்க நடந்து வந்து ஏறிய மேடை இது,” என அவர் உருக்கமாகப் பேசினார். மதுரையில் ஆடுகளம் படப்பிடிப்பில் கிடைத்த அமைதியான அனுபவங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய அவர், “சண்டையைத் தெருவில் செய்யாதீர்கள், படிப்பிலும், உழைப்பிலும் செய்யுங்கள்,” என்றார். தனது ‘இட்லி கடை’ திரைப்படம் ஒரு எளிமையான குடும்பப் படமாக இருக்கும் எனவும், ‘வடசென்னை 2’ படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் அவர் அறிவித்தார். திரையுலகில் அவரது இந்த வெளிப்படையான பேச்சு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
