தனுஷின் ‘இட்லி கடை’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்: அக்டோபர் 1ல் ரிலீஸ்!
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ திரைப்படம், தணிக்கைப் பணிகளை முடித்து, ‘U’ சான்றிதழைப் பெற்றுள்ளது. இப்படம், வரும் அக்டோபர் 1ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சாதாரண இட்லி கடையை மையமாக வைத்து, குடும்பம், நட்பு மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை உணர்வுபூர்வமாகக் கூறும் இப்படத்தின் டிரெய்லர், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. “இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது,” என தனுஷ் இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாகப் பேசியிருந்தார்.
படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மூத்த நடிகர் ராஜ்கிரண், “ஒரு நடிகராக, தனுஷுக்கு சக நடிகர்களின் மனது தெரிகிறது. ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக எடுத்துள்ளார்,” எனப் பாராட்டியுள்ளார். திரையுலகில் இப்படம் பெரும் வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
