Headlines
கொழும்பு: திருகோணமலைக் கரைக்கு அப்பாலான கடற்பகுதியில், இன்று (18) பிற்பகல் 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) தெரிவித்துள்ளது. திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 60 கி.மீ தொலைவில், மாலை 4.06 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம், நாட்டில் உள்ள நான்கு நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களிலும் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தால் இலங்கையின் கடலோரப் பகுதிகளுக்கு எவ்வித சுனாமி ஆபத்தும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் தேவையற்ற பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *