எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு (செப்டம்பர் 4) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 18 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் 24ஆவது கிலோமீற்றர் தூரப் பகுதியில், சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்த தங்கல்ல மாநகர சபையின் ஊழியர்கள் குழுவினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று 500 மீற்றர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் சுமார் 30 பேர் பயணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனினும், இரவு வேளையில் குறைந்த வெளிச்சம் காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எங்கள் Facebook பக்கத்தில் இணைந்துகொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.