Headlines

இலங்கைக்கு 8 மில்லியன் யூரோ மானியம் வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்: சுற்றாடல் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்!

கொழும்பு: இலங்கையின் உயிரியல் பன்முகத்தன்மைப் பாதுகாப்பு மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியம் (EU) 8 மில்லியன் யூரோ (சுமார் 2.9 பில்லியன் ரூபாய்) மானியத்தை வழங்கியுள்ளது. இதற்கான உடன்படிக்கை, இலங்கை அரசாங்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் இன்று (23) கைச்சாத்திடப்பட்டது. இந்த நிதியுதவியானது, சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுப்பதற்கும், திண்மக் கழிவு முகாமைத்துவ முறைமைகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும். இதன்மூலம், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரம் மேம்படுத்தப்படும். “இலங்கையின் மிக முக்கியமான சொத்துக்களில் ஒன்று அதன் உயிரியல் பன்முகத்தன்மை. ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுபவம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் அதனைப் பாதுகாக்க நாங்கள் உதவுவோம்,” என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ தெரிவித்தார். இந்தத் திட்டம், நாட்டின் நிலைபேறான பொருளாதார மீட்பு முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *