கொழும்பு: முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு, எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை (CEB), மின்சாரக் கட்டணத்தை 6.8% ஆல் அதிகரிக்குமாறு முன்மொழிந்துள்ளது. மறுசீரமைப்புத் திட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தத் தவறியதாலேயே இந்தக் கட்டண உயர்வு அவசியமாகிறது என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கம் கூறுகிறது.
இதேவேளை, மின்சார சபை பிரிக்கப்பட்டால், தற்போது 1.5 மில்லியன் ரூபாயாக உள்ள பணிப்பாளர் சபைக் கட்டணம், சுமார் 10 மில்லியன் ரூபாயாக (1 கோடி) உயரும் என மின்சார பாவனையாளர் சங்கம் எச்சரித்துள்ளது. பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்ற பின்னர், ஆணைக்குழுவின் இந்த இறுதி முடிவு வெளியாகவுள்ளது.
