கொழும்பு: “புதிய நாட்டிற்கு, இளைஞர்களின் உதாரணம் சே!” என்ற தொனிப்பொருளில், சோசலிச இளைஞர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சே தினம்’ நினைவேந்தல் நிகழ்வு, கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நேற்று (08) நடைபெற்றது. இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில், கியூபா தூதுவர் அன்ட்ரியாஸ் கொன்சாலஸ், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் சோசலிச இளைஞர் சங்கத்தின் சர்வதேச செயலாளர் அஞ்சன அமரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
