கொழும்பு: இலங்கை அடைந்துள்ள சமீபத்திய முன்னேற்றங்களை அங்கீகரித்து, ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபடுமாறு, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளை நேற்று (02) வெளிவிவகார அமைச்சில் சந்தித்து, நாட்டின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலின்போது, நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP), இழப்பீடுகளுக்கான அலுவலகம் (OR) மற்றும் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் (ONUR) ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டு தமது தரப்பு விளக்கங்களை அளித்திருந்தனர்.