Headlines

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!

கொழும்பு: முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) அழைப்பாணை விடுத்துள்ளது. நாளை (26) காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்குப் பணிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர் எவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. நாட்டின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த அழைப்பாணை முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *