கொழும்பு – எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால், பிரதான புகையிரத மார்க்கத்தில் (Main Line) சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (நவம்பர் 02) காலை மிரிகம மற்றும் வில்வத்தை புகையிரத நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புகையிரத திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதனால் பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் புகையிரத சேவைகளில் தாமதம் மற்றும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
