Headlines

கணேமுல்ல சஞ்சீவ’ கொலை: துப்பாக்கியை மறைக்க உதவிய பெண் சட்டத்தரணி கைது!

கொழும்பு: பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ (Sanjeewa Kumara Samararatne alias ‘Ganemulla Sanjeewa’) என்பவரின் கொலையில், துப்பாக்கியை மறைக்கப் பயன்படுத்தப்பட்ட தண்டைக்கோவை (Penal Code) நூலை வழங்கிய குற்றச்சாட்டில் கடவத்தை பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“கணேமுல்ல சஞ்சீவ” கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் (Hulftsdorp) உள்ள இலக்கம் 05 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வைத்து, சட்டத்தரணி போல் வேடமிட்ட துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணி

இந்தக் கொலையுடன் தொடர்புடைய முக்கிய பெண் சந்தேக நபரான ‘இஷாரா செவ்வந்தி’ (Ishara Sewwandi), துப்பாக்கிதாரியிடம் தண்டைக்கோவை நூலுக்குள் துப்பாக்கியை மறைத்துக் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. இவர் கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி நேபாளத்தில் வைத்து மேலும் சிலருடன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இஷாரா செவ்வந்திக்கு அந்த தண்டைக்கோவை நூலை வழங்கியவரே இந்தக் கடவத்தை பெண் சட்டத்தரணி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை தொடர்பாக ‘இஷாரா செவ்வந்தி’ உட்பட ஆறு சந்தேக நபர்களிடம் மூன்று பொலிஸ் குழுக்கள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போதே, சஞ்சீவவின் கொலை தொடர்பான பல முக்கிய விபரங்கள் வெளிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *