Headlines

2025 உயர்தரப் பரீட்சை: நவம்பர் 4 நள்ளிரவு முதல் வகுப்புக்களுக்குத் தடை!

கொழும்பு: 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் (G.C.E. Advanced Level – A/L) பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு நவம்பர் 04 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தத் தடை பரீட்சை காலம் நிறைவடையும் வரை அமுலில் இருக்கும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டிற்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகி, டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், இந்தத் தடையை கருத்தில் கொண்டு தமது இறுதித் தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *