வரலாற்றில் முதல் முறையாக ரூ. 3 லட்சத்தைத் தாண்டிய தங்கப் பவுண் விலை!
கொழும்பு: இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை, இன்று (08) 300,000 ரூபாயைத் தாண்டியுள்ளது. உலகச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பே இதற்குக் காரணமாகும்.
கொழும்பு புறக்கோட்டைச் சந்தையில், நேற்று 290,500 ரூபாயாகக் காணப்பட்ட 22 கரட் தங்கப் பவுணின் விலை, இன்று பிற்பகல் 303,400 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேவேளை, 24 கரட் தங்கப் பவுணின் விலை, 314,000 ரூபாயிலிருந்து 328,000 ரூபாயாக உயர்வடைந்துள்ளது.
உலகளாவிய பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க மத்திய வங்கி வட்டி வீதங்களைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளால், உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,000 அமெரிக்க டொலர்கள் என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
