கோட்டாபய, சமன் ஏக்கநாயக்கவுக்கு CID அழைப்பு: ரணில் வழக்கில் புதிய திருப்பம்!

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு, இரண்டு வெவ்வேறு முக்கிய விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அழைப்பாணை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘அரகலய’ போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியமை குறித்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்துப் பயணம் தொடர்பான விசாரணைக்காக, சமன் ஏக்கநாயக்க நாளை (01) CIDயில் முன்னிலையாகுமாறு பணிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் சர்ச்சைக்குரிய பயணம் தொடர்பில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது பயணத்திற்கான அழைப்பிதழ் உண்மையானதுதான் என இங்கிலாந்தின் வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளதாக, ரணிலின் ஊடகப் பிரிவு புதிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள் CIDயிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

One thought on “கோட்டாபய, சமன் ஏக்கநாயக்கவுக்கு CID அழைப்பு: ரணில் வழக்கில் புதிய திருப்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *