கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக அழைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி முகத்திடல் ‘அரகலய’ போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைக் கட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த அழைப்பாணை விடுக்கப்படவுள்ளது.
இதே சம்பவம் தொடர்பில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.