தங்காலையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தார் கோட்டாபய ராஜபக்ஷ!
தங்காலை: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை, தங்காலையில் உள்ள அவரது கார்ல்டன் இல்லத்தில் நேற்று (19) சந்தித்துப் பேசினார்.
கொழும்பில் உள்ள தனது உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிய மஹிந்த ராஜபக்ஷ, தனது சொந்த ஊரான தங்காலையில் உள்ள இல்லத்திற்குத் திரும்பியுள்ளார். அவரை வரவேற்பதற்காக, நாடு முழுவதிலுமிருந்து பெருமளவிலான ஆதரவாளர்கள் கார்ல்டன் இல்லத்திற்கு வருகை தந்து கொண்டிருக்கும் நிலையிலேயே, இந்தச் சகோதரர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
