கொழும்பு: 2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வௌியிடப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், https://www.doenets.lk/examresults என்ற இணையதளத்திற்குச் சென்று தமது பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெற்ற இந்தப் பரீட்சையில், நாடு முழுவதிலுமிருந்து 307,951 மாணவர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.