Headlines

எல்பிட்டிய துப்பாக்கிச் சூடு: பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு: தென் மாகாணத்தின் எல்பிட்டிய, ஓமத்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் நேற்று (04) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், வீட்டின் ஜன்னல் ஒன்று சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் இடம்பெறும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக, பொலிஸாருக்குத் தகவல் வழங்கியமைக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த குற்றச் செயல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *