Headlines

சட்டத்தரணி வீட்டில் அத்துமீறிய பொலிஸார்: கண்டித்து யாழில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

யாழ்ப்பாணம்: நீதிமன்ற அனுமதியின்றி, சட்டத்தரணி ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்திய பொலிஸாரின் செயலைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணிகள் இன்று (07) பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காணி உறுதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலிஸார், குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணி ஒருவரின் வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்துள்ளனர். இதைக் கண்டித்தே நீதிமன்றங்களுக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் சட்டத்தரணிகள், தம்மைக் கைது செய்வதைத் தடுப்பதற்காக, நாளை நீதிமன்றத்தில் எதிர்பார்ப்புப் பிணை மனுக்களைத் தாக்கல் செய்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *