டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானில் உள்ள தனது குடும்ப வணிக நலன்களுக்காக, இந்தியாவுடனான அமெரிக்காவின் நீண்டகால உறவைப் பலவீனப்படுத்துகிறார் என அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட இந்திய-அமெரிக்க உறவுகளை ட்ரம்ப் உடைத்து வருகிறார். இது அமெரிக்காவின் நலன்களுக்கே எதிரானதுடன், ஜேர்மனி, ஜப்பான் போன்ற நட்பு நாடுகளின் நம்பிக்கையையும் சிதைக்கும்,” என சல்லிவன் எச்சரித்துள்ளார்.
சமீபத்தில், பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா பாராட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படும் பலுசிஸ்தான் விடுதலைப் படையை (BLA) ஒரு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசீம் முனிரின் அமெரிக்க விஜயத்தின்போது இந்த அறிவிப்புகள் வெளியானது, அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தைக் காட்டுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்