கரூர் துயரம்: CBI அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை கோரி நீதிமன்றத்தை நாடுகிறது தவெக!
சென்னை: கரூரில் நேற்று (27) நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சோக சம்பவத்தைத் தொடர்ந்து, இந்த விபத்து குறித்து சிபிஐ (CBI) அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தை நாட, தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பாக, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தையும் தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், “காவல்துறை நிபந்தனைகளை தவெக மீறியதே விபத்திற்குக் காரணம்,” என திமுக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளோ, “பாதுகாப்பு ஏற்பாடுகளில் தமிழக அரசு தவறிவிட்டது,” எனக் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த பரஸ்பரக் குற்றச்சாட்டுகளால், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
