கொழும்பு: இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கெஹெல்பத்தர பத்மே’ உள்ளிட்ட ஐந்து பேரும் சற்று முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் வருகையை முன்னிட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் நிலைமைகளைக் கண்காணிக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
சில மணி நேரத் தாமதத்தின் பின்னர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம், இன்று (30) இரவு 7.20 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்தது.