கொழும்பு: இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘கெஹெல்பத்தர பத்மே’ உள்ளிட்ட ஐந்து முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களையும், 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.
இதன்படி, ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘கொமாண்டோ சலிந்த’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக்காவலிலும், ‘பக்கோ சமன்’, ‘தெம்பிலி லஹிரு’ ஆகியோர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவின் தடுப்புக்காவலிலும் வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (30) இவர்கள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.