கொழும்பு: இந்தோனேசியாவிலிருந்து நேற்று (30) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், மேலதிக விசாரணைகளுக்காக வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, ‘கெஹெல்பத்தர பத்மே‘, ‘கொமாண்டோ சலிந்த’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
‘பக்கோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’ ஆகியோர், மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த ஐவரும் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.