கொழும்பு: இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ‘கெஹெல்பத்தர பத்மே’ உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவினரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, விசேட பொலிஸ் குழுவொன்று இந்தோனேசியா செல்லவுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், குறித்த குழுவினர் நாளை (31) பிற்பகல் இலங்கையை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ‘பக்கோ சமன்’ என்பவரின் மனைவியும், பிள்ளையும் நேற்று (29) பிற்பகல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘கொமாண்டோ சலிந்த’ ஆகியோர் சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துக்கள் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சட்டவிரோதப் பணத்தின் மூலம், பத்மே இலங்கையில் பல அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
One thought on “பத்மேயை அழைத்து வர இந்தோனேசியா சென்றது CID”