Headlines

தரமற்ற தடுப்பூசிக் கொள்வனவு: கெஹெலிய ரம்புக்வெல்ல மீது மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

கொழும்பு: கடந்த அரசாங்கத்தின்போது, தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ததன் மூலம், அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று (16) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகளுக்குப் பிணை வழங்குவதை சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்க்கும் என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம மன்றில் தெரிவித்தார். தற்போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகள், பிணை கோரி தமது வாதங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த ஊழல் குற்றச்சாட்டு பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *