KPY பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியானது: எந்தத் தளத்தில் பார்க்கலாம்?
சென்னை: விஜய் டிவி புகழ், நகைச்சுவை நடிகர் KPY பாலா, கதாநாயகனாக அறிமுகமான ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம், தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம், சுமாரான வரவேற்பைப் பெற்றிருந்தது. பட வெளியீட்டின்போது, பாலாவின் சமூக சேவைகள் குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் விளக்கமளித்திருந்த நிலையில், தற்போது படம் ஓடிடிக்கு வந்துள்ளது.
திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பை விட, ஓடிடியில் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் படக்குழுவினர் உள்ளனர். திரையுலகில் ஓடிடி வெளியீடுகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
