Headlines

கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு’ பேருந்து வழங்கிய விவகாரம்: லலித் வீரதுங்கவிடம் CID விசாரணை!

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், ஜனாதிபதி செயலாளராகப் பணியாற்றிய லலித் வீரதுங்கவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்ய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) திட்டமிட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சிற்காக வரிவிலக்கு அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்து ஒன்றை, ‘கார்ல்டன் பாலர் பாடசாலைக்கு’ வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே இந்த விசாரணை நடைபெறவுள்ளது. முன்னர் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கைவிடப்பட்டிருந்த இந்த வழக்கு, தற்போது புதிய சாட்சியங்கள் கிடைத்துள்ளதால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குற்றவியல் விசாரணை, ‘சிரிலிய’ செயற்றிட்டம் தொடர்பான பரந்த விசாரணையின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *