லங்கா மெட்ரோ பஸ்’ ஒக்டோபர் 8இல் ஆரம்பம்
கொழும்பு: “லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம்” என்ற புதிய நிறுவனம், ஒக்டோபர் 8ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச.) கீழ் நிறுவப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது இ.போ.ச.வுக்கு முழுமையாகச் சொந்தமானதாக இருந்தாலும், தனியார் துறையைப் போன்று வினைத்திறனுடன் இயங்கும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல், நீண்ட தூர சேவைகளில் பயணிக்கும் பேருந்துப் பயணிகளும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.
இ.போ.ச.வுக்குச் சொந்தமான பழைய லேலண்ட் மற்றும் டாடா பேருந்துகளில் சீட் பெல்ட்கள் இல்லாததால், புதிய சீட் பெல்ட்களைத் தயாரிக்குமாறு அதன் தொழில்நுட்பப் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்கள் முக்கியமானவையாகும்.
